நெல்லையில் பொங்கலை முன்னிட்டு 45 கிலோ உரலை தூக்கி அசத்திய பெண்கள் : பற்கலால் தேங்காய் உரித்து அசத்திய இளைஞர்கள்

Jan 16 2018 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லையில் பொங்கலை முன்னிட்டு 45 கிலோ உரலை தூக்கி பெண்கள் அசத்தினர். மேலும், பற்கலால் தேங்காய் உரித்து இளைஞர்கள் அசத்தனர்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்ட உரலை தூக்கும் போட்டி நடைபெற்றது. இளம்பெண்கள் உட்பட திருமணமான பெண்கள் வரை கலந்து கொண்டனர். 45 கிலோ எடையுள்ள உரலை தூக்கி பல பெண்கள் அசத்தினர். அதே போல் இளைஞர்கள் 90 கிலோ இளவட்ட கல்லை தூக்கி கழுத்தை சுற்றினர். 11 முறை கழுத்தை சுற்றி தங்கராஜ் என்பவர் முதல் பரிசை வென்ரார். மேலும் தேங்காயை பல்லால் உரிக்கும் போட்டியும் நடைபெற்றது. உரலை தூக்கும் போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி கிராமத்தில் மாட்டுப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி இளைஞர்களுக்கு இளவட்ட கல் தூக்கும் போட்டி, கபடி போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00