தென்னாப்பிரிக்‍காவுக்‍கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்‍கெட் போட்டி- இந்தியா 6 விக்‍கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

Feb 2 2018 11:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்னாப்பிரிக்‍கா அணிக்‍கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்‍கெட் போட்டியில், இந்தியா 6 விக்‍கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டர்பனில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்‍கா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்‍கத்திலிருந்தே சீரான ரன் விகிதத்தை அந்த அணி எடுத்து வந்தது. கேப்டன் Du Plesis அதிரடியாக விளையாடி, 11 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 112 பந்துகளில் 120 ரன்களை எடுத்தார். இதனையடுத்து, De Kock 34 ரன்களுடனும், Morris 37 ரன்களுடனும் அதிகபட்சமாக எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பவே, 50 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்‍கா 8 விக்‍கெட் இழப்புக்‍கு 269 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக Kuldeep Yadav 3 விக்‍கெட்டுகளும், Chahal 2 விக்‍கெட்டுகளும், புவனேஷ்குமார் மற்றும் பும்ரா ஆகியோர் தலா ஒரு விக்‍கெட்டும் எடுத்தனர்.

பின்னர், 270 ரன்களை இலக்‍காகக்‍ கொண்டு இந்திய அணி களமிறங்கியது. தொடக்‍க ஆட்டக்‍காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 20 ரன்களுடனும், ஷிகார் தவான் 35 ரன்களுடனும் பெவிலியன் திரும்பினர். இதனைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலியும், ரஹானேவும் ஜோடி சேர்ந்தனர். பொறுப்பாக விளையாடிய இந்த ஜோடி, தென்னாப்பிரிக்‍க பந்துவீச்சாளர்களை திணறடித்து, அணியின் வெற்றியை தீர்மானித்தது. விராட் கோலி சதமடித்து அசத்தினார். அவர் 10 பவுண்டரிகளுடன் 119 பந்துகளில் 112 ரன்களுடனும், மறுபுறம் விளையாடிய ரஹானே 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்‍சர்களுடன் 86 பந்துகளில் 79 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 3-வது விக்‍கெட்டுக்‍கு விராட் கோலி - ரஹானே ஜோடி 189 ரன்கள் அடித்து அசத்தியது. இறுதியில் இந்திய அணி 45 புள்ளி 3 ஓவர்களில் 4 விக்‍கெட் இழப்புக்‍கு 270 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்‍கா அணியின் Phehlukwayo அதிகபட்சமாக 2 விக்‍கெட்டுகளை எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்‍கில் முன்னிலை பெற்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00