தூத்துக்குடி பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் விழா : மாட்டுவண்டிப் போட்டி

May 13 2018 6:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் விழாவையொட்டி நடைபெற்ற மாட்டுவண்டிப் போட்டியில் 30-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில், சுதந்திரப்போராட்டத்திற்கு முதன்முதலாக வித்திட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் குலதெய்வமான வீரஜக்கதேவி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் விழாவையொட்டி நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியில், மதுரை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில், 6 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற சிறிய மாட்டுவண்டி போட்டியில் தூத்துக்குடி சிந்தலக்கரையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரது மட்டுவண்டி முதல் இடம் பிடித்தது. இதேபோன்று, 10 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி போட்டியில் திருநெல்வேலி மாவட்டம் வேலங்குளத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மாட்டு வண்டி முதல் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமானோ மாட்டு வண்டிப் போட்டியை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00