கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி : மும்பை யூனியன் வங்கி, நியூடெல்லி ஓ.என்.ஜி.சி. அணி வெற்றி

May 22 2018 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் மும்பை யூனியன் வங்கி ஹாக்கி அணியும், நியூடெல்லி ஓ.என்.ஜி.சி. ஹாக்கி அணியும் வெற்றி பெற்றது.

கோவில்பட்டியில் லட்சுமி அம்மாள் நினைவு அகில இந்திய ஹாக்கி போட்டிகள் கடந்த வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 27ஆம் தேதி வரை நடைபெற்று வரும் இப்போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு ஹாக்கி அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. நேற்று நடைபெற்ற 5வது நாள் ஆட்டத்தின் முதலாவதாக மும்பை யூனியன் வங்கி அணியும், சென்னை தெற்கு ரயில்வே அணியும் மோதின. இதில் 3 க்கு 2 என்ற கோல் கணக்கில் மும்பை யூனியன் வங்கி ஹாக்கி அணி வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில், நியூடெல்லி ஓ.என்.ஜி.சி. அணியுடன், உத்திரபிரதேசம் காசியாபாத் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் விளையாடின. இதில் 10 க்கு 0 என்ற கோல் கணக்கில் நியூடெல்லி ஓ.என்.ஜி.சி. ஹாக்கி அணி வெற்றி பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00