உலக கிக்பாக்சிங் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றி : சென்னை விமானநிலையத்தில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

Jun 7 2018 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவில் நடைபெற்ற உலக கிக்பாக்சிங் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, சென்னை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரஷ்யாவில் உள்ள அனபா நகரில் கடந்த மாதம் 30 ஆம் தேதி முதல் 4 தேதி வரை உலக கிக்பாக்சிங்க் போட்டி நடைப்பெற்றது. இதில் இந்தியா உள்ளிட்ட 21 நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து மட்டும் 39 வீரர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டிகளின் 79 கிலோ பிரிவில் சென்னையை சேர்ந்த மாணவர் வசீகரன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் மாநில, மண்டல, தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் பலமுறை வெற்றி பெற்று பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போட்டிகளின் 55 கிலோ எடைப்பிரிவில் சென்னையை சேர்ந்த அருண் தனிஷ்க் என்ற மாணவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதையடுத்து, பதக்கங்களுடன் தாயகம் திரும்பிய இரண்டு மாணவர்களுக்கும், சென்னை விமானநிலையத்தில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00