உலகின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான உலகக்‍கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் கோலாகல தொடக்‍கம் - தொடக்‍க ஆட்டத்தில் சவுதி அரேபியாவை சந்திக்‍கிறது ரஷ்யா

Jun 14 2018 10:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று, உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள், கலை நிகழ்ச்சியுடன் தொடங்குகின்றன. போட்டியை காண உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் ரஷ்யாவில் குவிந்து வருவதால் அந்நாடே விழாக்‍கோலம் பூண்டுள்ளது.

ரசிர்கள் ஆவலுடன் எதிர்நோக்‍கியுள்ள உலகக்‍கோப்பை கால்பந்து திருவிழா, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று கோலாகலமாகத் தொடங்குகின்றன. 32 நாடுகளின் அணிகள் கலந்துக் கொள்ளும் இப்போட்டி இன்று தொடங்கி, ஜூலை மாதம் 15ம் தேதி வரை 64 ஆட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக 11 நகரங்களில் 12 மைதானங்கள் தயார்செய்யப்பட்டு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

சுமார் ஒரு கோடி ரசிகர்கள் மாஸ்கோவை நோக்கி திரண்டு வருகின்றனர். இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு, கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் உலகக்‍கோப்பை போட்டிகள் தொடங்குகின்றன. தொடக்க ஆட்டத்தில், போட்டியை நடத்தும் ரஷ்யாவும், சவூதி அரேபியாவும் மோதுகின்றன. உலகக்‍கோப்பை பாதுகாப்புப் பணியில் சுமார் 30 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போட்டிகள் 12 நகரங்களில் நடைபெறுவதால் அதனை கண்டுகளிக்க சர்வதேச ரசிகர்கள் ரஷ்யாவில் குவிந்து வருவதால், அந்நாடே விழாக் கோலம் பூண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00