உலகக் கோப்பை கால்பந்தாட்டம் : எந்த அணி வெற்றிபெறும் என்பதை கணிக்கும் வெள்ளைப்பூனை

Jun 14 2018 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில், எந்த அணி வெற்றிபெறும் என்பதை, அந்நாட்டைச் சேர்ந்த வெள்ளைப்பூனை ஒன்று கணித்து வருகிறது.

ரஷ்யாவில் இன்று உலகக்‍ கோப்பை கால்பந்து திருவிழா கோலாகலமாகத் தொடங்கவுள்ள நிலையில், அந்நாட்டின் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் பராமரிக்‍கப்பட்டு வரும் Achilles என்ற பூனை உலகக் கோப்பையில் வெல்லப் போகும் அணியை துல்லியமாக கணித்து வருகிறது. வெண்பனி உடலுடன் காட்சியளிக்கும் இந்த அழகுப்பூனைதான் இன்று நடைபெறும் முதல் உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் வெல்லப்போகும் அணியை அனுமானம் செய்துள்ளது. இந்த பூனைக்கு அபாரமான கணிப்புத்திறன் இருப்பதாக கருதப்படுகிறது. முதல் போட்டியில் ரஷ்யாவும் சவூதி அரேபியாவும் மோதுவதால், தராசின் ஒரு தட்டில் ரஷ்ய கொடியுடன் பிஸ்கட் தூளும், மற்றொரு தட்டில் சவூதி அரேபிய கொடியுடன் பிஸ்கட் தூளும் வைக்கப்பட்டது. பூனையோ சவூதியின் தட்டில் உள்ள பிஸ்கெட்டை முகர்ந்து விட்டு பின்னர் ரஷ்யாவின் தட்டில் உள்ள உணவை உண்ணத் தொடங்கியது. இதனால் இன்றையப் போட்டியில் ரஷ்யா வெற்றிபெறும் என கணித்துள்ளது. இந்த கணிப்பால் அந்நாட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00