ரஷ்யாவில் கோலாகல கலைநிகழ்ச்சிகளுடன் வண்ணமயமாக தொடங்கியது உலகக் கோப்பை கால்பந்து போட்டி - தொடக்‍க ஆட்டத்தில், சவுதிஅரேபியாவை வீழ்த்தியது ரஷ்யா

Jun 15 2018 12:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கோலாகல கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. முதல் போட்டியில் ரஷிய அணி 5-0 என்ற கோல்கணக்கில் சவுதிஅரேபியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கோலாகல கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் இசை விருந்து மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசங்களுடன் தொடங்கிய 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டிகளை பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோ பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' என்ற 2-வது சுற்றுக்கு முன்னேறும்.

மாஸ்கோவில் லுஸ்னிகி மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ரஷியா- சவுதிஅரேபியா அணிகள் மோதின. இந்த போட்டியின் முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ரஷிய அணி 5-0 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ரஷ்ய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00