உலகக்‍கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கல் - ஸ்பெயின் அணிகளுக்‍கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது - மற்றொரு ஆட்டத்தில் மொராக்கோ அணியை வீழ்த்தியது ஈரான்

Jun 16 2018 10:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

போர்ச்சுக்கல் - ஸ்பெயின் அணிகள் மோதிய உலக கோப்பை கால்பந்து லீக் போட்டி யாருக்கும் வெற்றி, தோல்வியின்றி 'டிரா'வில் முடிந்தது.

உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. 'பி' பிரிவில் இடம்பிடித்துள்ள போர்த்துகல் - ஸ்பெயின் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் போர்த்துகல் அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் மூன்றாவது நிமிடத்திலேயே போர்த்துகல் அணி 1-0 என முன்னிலை பெற்றது.

அதைத்தொடர்ந்து 24-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் தியாகோ கோஸ்டா சிறப்பான முறையில் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. அதன்பின் ரொனால்டோ மீண்டும் ஒரு கோல் அடித்ததால், போர்த்துகல் அணி 2-1 என முன்னிலையில் இருந்தது.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதிநேர ஆட்டத்தில் ஸ்பெயின் அணியின் தியாகோ கோஸ்டா, நாச்சோ ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் ஸ்பெயின் அணி 3-2 என முன்னிலை பெற்றது.

அதன்பின் ஆட்டம் முடிய 2 நிமிடமே இருக்கும் நிலையில், கிடைத்த பிரீ-கிக் வாய்ப்பை ரொனால்டோ சரியாக பயன்படுத்தி கொண்டு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் மீண்டும் 3-3 என சமனானது. அதைத்தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் எந்த கோலும் அடிக்கப்படாததால் இந்த போட்டி 3-3 என சமனில் முடிந்தது.

முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில், ஈரான், மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் முதல்பாதி நேர ஆட்டம் கோலின்றி முடிவடைந்தது. 2-வது பாதி நேரத்திலும் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில், மொராக்கோ அணியின் பவுஹட்டவுஸ் தலையில் பட்ட பந்து கோலானது. இதனால் ஈரான் 1-0 என முன்னிலைப் பெற்றது.

நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் பிரான்ஸ் - ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா - ஐஸ்லாந்து, பெரு - டென்மார்க், குரோசியா - நைஜீரியா அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00