ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்‍ கோப்பை கால்பந்து போட்டி - பெருவை தோற்கடித்தது டென்மார்க்‍ - ஆர்ஜெண்டினாவை டிரா செய்து ஐஸ்லாந்து அதிர்ச்சி

Jun 17 2018 1:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பெரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணி வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஐஸ்லாந்து அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது.

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று மட்டும் மொத்தம் நான்கு போட்டிகள் நடைபெற்றது.

முதல் போட்டியாக ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பிரான்ஸ் அணி, ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

அடுத்ததாக உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 'டி' பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

பின்னர், உலக கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் 'சி' பிரிவில் உள்ள பெரு மற்றும் டென்மார்க் அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கியது முதல், பெரு மற்றும் டென்மார்க் ஆகிய இரண்டு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. டென்மார்க் அணியின் சார்பில் யுசுப் பவுல்சன் தனது முதல் கோலை பதிவு செய்தார். இறுதிவரை பெரு அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை. இதன் மூலம் பெரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணி வெற்றி பெற்றது.

இதோபோல், உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 'சி' பிரிவில், லீக் ஆட்டத்தில் குரோசியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியா அணியை வீழ்த்தியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00