ரஷ்யாவில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி- நடப்புச் சாம்பியனான ஜெர்மனி மெக்சிகோவிடம் அதிர்ச்சி தோல்வி

Jun 18 2018 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், 'எஃப்' பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில், நடப்புச் சாம்பியனான ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அந்த அணியை, ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் மெக்சிகோ அணி வென்றது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில், 'எஃப்' பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், நடப்புச் சாம்பியனான ஜெர்மனியும், மெக்சிகோ அணியும் மோதின.

முதல் பாதி நேரத்தின் 35-வது நிமிடத்தில் மெக்சிகோ அணியின் Hirving Lozano, கோல் அடித்தார். இதனால் மெக்சிகோ அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் மெக்சிகோ அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜெர்மனி அணியின் தோல்வி, மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முன்னதாக, "இ" பிரிவில் இடம் பெற்றுள்ள செர்பியா மற்றும் கோஸ்டாரிகா அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. இதில், செர்பியா அணி, கோஸ்டாரிகா அணியை வென்றது. கடந்த 2014-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில், கோஸ்டாரிகா அணி, காலிறுதி வரை முன்னேறி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

"இ" பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசில், சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையிலான மற்றொரு லீக் ஆட்டம், 1-1 என சமனில் முடிந்தது. இப்போட்டியின் முதல் பாதி நேர ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில், பிரேசில் அணியின் Philippe Coutinho கோல் அடித்தார். இதனால் பிரேசில் அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில், சுவிட்சர்லாந்து அணியின் Steven Zuber கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. அதன்பின் இறுதிவரை இரு அணிகளும் கோல் அடிக்காததால், இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00