உலகக்கோப்பை கால்பந்து திருவிழா : பிரசில், நைஜீரியா, சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்று முன்னிலை

Jun 23 2018 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 9-வது நாளாக நேற்று நடைபெற்ற மூன்று போட்டிகளில், பிரசில், நைஜீரியா, சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளன.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில், நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் 'ஈ' பிரிவில் பிரசில் - கோஸ்டா ரிகா அணிகள் மோதின. முதல் ஆட்டத்தை டிரா செய்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையுடன் பிரேசில் களம் இறங்கியது.

ஆட்டம் தொடங்கியது முதலே பிரசில் அணியின் நெய்மர், ஜீசஸ், கவுட்டினோ, கோஸ்டா ரிகாவின் கோல் எல்லையை நோக்கி பந்தை கொண்டு சென்றே இருந்தனர். ஆனால் ஒருமுறை கூட பந்து கோல் கம்பத்திற்குள் செல்லவில்லை. இதனால் 90 நிமிடம் வரை பிரசில் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. 90 நிமிடம் முடிந்த பிறகு காயம், ஆட்டம் நேர நிறுத்தத்தை கணக்கில் கொண்டு 7 நிமிடம் கூடுதலாக கொடுக்கப்பட்டது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பிரசில் அணி வீரர்களான கவுட்டினோ, நெய்மர் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால், 2-0 என்ற கணக்கில் கோஸ்டா ரிகாவை வீழ்த்தி பிரசில் வெற்றி பெற்றது.

இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் "டி" பிரிவில் இடம் பிடித்துள்ள நைஜீரியா மற்றும் ஐஸ்லாந்து அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து நைஜீரியா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐஸ்லாந்து அணியினரின் ஆட்டம் அமைந்தது. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் நைஜீரியாவைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால், நைஜீரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

முன்றாவதாக நடைபெற்ற போட்டியில், இ பிரிவில் இடம் பிடித்துள்ள செர்பியா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. போட்டி தொடங்கிய 5-வது நிமிடத்தில் செர்பிய அணியின் அலெக்சாண்டர் மிட்ரோவிக் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சுவிட்சர்லாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். அந்த அணியின் கிரானிட் சாகா 52-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டம் முடியும் நிலையில் பரபரப்பான 90-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் செர்டான் ஷாகிரி ஒரு கோல் அடித்தார். இதனால் சுவிட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில், செர்பியா அணியை வீழ்த்தியது.

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 10-வது நாளான இன்று, "ஜி" பிரிவில் இடம்பெற்றுள்ள பெல்ஜியம் - துனிசியா அணிகளும், "F" பிரிவில் இடம்பெற்றுள்ள தென்கொரியா - மெக்சிகோ அணிகளும், ஜெர்மனி - ஸ்வீடன் அணிகளும் மோத உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00