உலக கோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதி ஆட்டத்திற்கு ரஷ்யா, குரோஷியா அணிகள் தகுதி - இன்றைய நாக்‍அவுட் சுற்று ஆட்டங்களில் பிரசில்-மெக்‍சிகோ, பெல்ஜியம்-ஜப்பான் அணிகள் மோதல்

Jul 2 2018 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்‍கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில், பரபரப்பான பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றிபெற்று ரஷியா மற்றும் குரோஷிய அணிகள் காலிறுதிக்‍கு தகுதி பெற்றன.

ரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்‍கோப்பை கால்பந்து போட்டியில், தற்போது விறுவிறுப்பான நாக்-அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. மாஸ்கோ நகரில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில், பலம்வாய்ந்த ஸ்பெயின் அணியை, உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு ரஷ்யா எதிர்கொண்டது. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில், ஸ்பெயின் வீரர் ராமோஸ் கோல் அடிக்க முயன்றபோது, அவரை தடுப்பதாகக்‍கூறி ரஷ்ய வீரர் இஃனாசெவிச் தவறுதலாக சேம்சைடு கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் முன்னிலை பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் ரஷியா வீரர் ஏரியம் டியுபா ஒரு கோல் அடித்தால் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன. மறுபாதி ஆட்டத்தில் இரு அணியும் கோல் அடிக்‍காததால், 2 முறை கூடுதல் நேரம் ஒதுக்‍கப்பட்டது. அதிலும் கோல் அடிக்‍காததால், பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்‍கப்பட்டது. இதில், சிறப்பாக செயல்பட்ட ரஷ்யா, 4-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

Nizhny Novgorod நகரில் நேற்றிரவு 11.30 மணிக்‍கு நடைபெற்ற மற்றொரு நாக்‍அவுட் ஆட்டத்தில், குரோஷிய - டென்மார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே டென்மார்க் அணியின் மதியாஸ் ஜோர்ஜென்சன் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு வலு சேர்த்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 4-வது நிமிடத்தில் குரோஷியா அணி வீரர் மரியோ மண்டூகிக் ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் சமனிலை அடைந்தது. இதனையடுத்து, இறுதிவரை இரு அணியும் கோல் அடிக்‍காததால், கூடுதல் நேரம் ஒதுக்‍கப்பட்டது. அதிலும் கோல் விழாததால், பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்‍கப்பட்டது. இதை தங்களுக்‍கு சாதகமாக பயன்படுத்திக்‍கொண்ட குரோஷிய அணி, 3-2 என்ற கோல் கணக்கில் டென்மார்க்‍கை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது.

நாக்‍அவுட் சுற்றில் வெற்றிபெற்ற ரஷ்யாவும், குரோஷியாவும் Sochi நகரில், வரும் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள காலிறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில், Samara நகரில் இன்று இரவு 7.30 மணிக்‍கு நடைபெறவுள்ள நாக்‍-அவுட் சுற்று ஆட்டத்தில், மெக்‍ஸிகோ அணி, பலம் வாய்ந்த பிரசில் அணியுடன் மோதுகிறது. இரவு 11.30 மணிக்‍கு Rostov நகரில் நடைபெறவுள்ள மற்றொரு போட்டியில், பலம்வாய்ந்த பெல்ஜியம் அணியை, ஜப்பான் எதிர்கொள்கிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00