ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்‍கு மேலும் ஒரு தங்கப் பதக்‍கம் - துப்பாக்‍கிச்சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கப் பதக்‍கமும், அபிஷேக்‍ வர்மா வெண்கலப் பதக்‍கமும் வென்று அசத்தல்

Aug 21 2018 4:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆசிய விளையாட்டு போட்டி துப்பாக்‍கிச்சுடுதல் பிரிவில், இந்தியாவுக்‍கு இன்று மேலும் ஒரு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்‍கம் கிடைத்துள்ளது. இதன்மூலம், 8 பதக்‍கங்களுடன், பதக்‍க பட்டியலில் இந்தியா 7-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

18-வது ஆசிய விளையாட்டு போட்டி, இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்‍கான மல்யுத்தம் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவின் இறுதியாட்டத்தில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், ஜப்பானைச் சேர்ந்த ஐரி யுகியை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 6-2 என வெற்றி பெற்று, வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். முதல் ரவுண்டில் 4-0 என வினேஷ் போகத் முன்னிலைப் பெற்றார். 2-வது சுற்று 2-2 என டிராவில் முடிந்த நிலையில், ஒட்டுமொத்தமாக 6-2 என வினேஷ் போகத் அபாரமாக வெற்றி பெற்று, தங்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் ஆசிய விளையாட்டில் பெண்கள் மல்யுத்தத்தில் மகுடம் சூடிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

அரியானாவைச் சேர்ந்த 23 வயதான வினேஷ் போகத், காமன்வெல்த் போட்டியிலும் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. தங்கப்பதக்‍கம் வென்று சாதனை படைத்த வினேஷ் போகத்துக்‍கு, பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆடவருக்‍கான 10 மீட்டர் airpistol துப்பாக்‍கிச்சுடுதல் போட்டியில், இந்திய வீரர் Saurabh Chaudhary சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்‍கம் வென்று அசத்தினர். இதேபோட்டியில், இந்தியாவின் Abhishek Verma 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்‍கத்தை தனதாக்‍கினார்.

இதனிடையே, துப்பாக்‍கிச்சுடுதல் 50 மீட்டர் air rifle பிரிவில், இந்தியாவின் Sanjeev Rajput வெள்ளிப்பதக்‍கம் வென்றார். இதன்மூலம், 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்‍கங்களுடன், பதக்‍க பட்டியலில் இந்தியா 7-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00