ஆசிய விளையாட்டு போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியா வீராங்கனை Dutee Chand வெள்ளிப் பதக்‍கம் வென்றார் : 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வேறு டிராக்கில் கால் வைத்தததால் பதக்கத்தை இழந்தார் தமிழக வீரர் கோவிந்த லக்‍ஷ்மணன்

Aug 27 2018 4:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆசிய விளையாட்டு போட்டியின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், இந்தியா வீராங்கனை Dutee Chand வெள்ளிப் பதக்‍கம் வென்றார். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் கோவிந்த லக்ஷமணன், வேறு டிராக்கில் கால் வைத்தததால் பதக்கத்தை இழக்க நேரிட்டது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இதில், இந்திய வீரர் - வீராங்கனைகள் தங்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, தொடர்ந்து பதக்‍கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், இந்தியா வீராங்கனை Dutee Chand வெள்ளிப் பதக்‍கம் வென்று அசத்தினார். இறுதிப் போட்டியில் சீனா, பஹ்ரைன், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், மலேசியா ஆகிய வீராங்கனைகளுடன் Dutee Chand-ம் பங்கேற்று ஓடினர். தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 11 புள்ளி மூன்று இரண்டு வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்த 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்‍கம் வென்றார்.

ஆடவருக்‍கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், இந்தியாவின் Muhammed Anas, பந்தய தூரத்தை 45 புள்ளி ஆறு ஒன்பது வினாடிகள் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மகளிருக்‍கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீராங்கனை Hima Das, 50 புள்ளி ஏழு ஒன்பது வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மகளிர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேவால், அரையிறுதிக்‍கு தகுதிபெற்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான பி.​வி. சிந்துவும், மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றதால், பதக்‍கம் உறுதியானது.

10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் கோவிந்தன் லக்ஷ்மணன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. தனக்கு வகுக்கப்பட்ட ஓடு பாதையில் இருந்து லக்ஷ்மணன் சிறிது விலகி மற்றொரு பாதையில் கால் வைத்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவரது பதக்கம் பறிக்கப்பட்டது.

வில்வித்தையில் மகளிர் மற்றும் ஆடவர் அணிகள், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் இரு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. தற்போது வரை ஆசிய விளையாட்டில் இந்தியா 7 தங்கம், 10 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்களுடன் 9-வது இடத்தை பிடித்துள்ளது. 78 தங்கம் உட்பட 174 பதக்‍கங்களுடன் சீனா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்‍கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00