கொல்கத்தாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்‍கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்‍கெட் போட்டி : 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

Nov 5 2018 4:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்‍கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்‍கெட் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் 20 ஓவர் போட்டி, கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்தியா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், இந்திய வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சை சமாளிக்‍க முடியாமல் திணறியது. இதனால் அந்த அணி, 20 ஓவ​ரில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் மடடுமே எடுத்தது. இந்தியாவின் Kuldeep Yadav 3 விக்‍கெட்டுகளை வீழ்த்தினார்.

110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியாவின் தொடக்‍க வீரர்கள் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். வேகப்பந்து வீச்சாளர்கள் Thomas, Keemo Paul, Brathwaite ஆகியோர், தங்களது பவுன்சர் பந்துவீச்சு மூலம் இந்திய வீரர்களுக்‍கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் 45 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா தடுமாறியது. Krunal Pandya - தினேஷ் கார்த்திக் ஜோடி, நிதானமாக விளையாடி வெற்றி பாதைக்‍கு அழைத்துச் சென்றனர். இதனால் 17 புள்ளி 5 ஓவரில், 5 விக்கெட்டுகள் இழப்புக்‍கு 110 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில், 1-க்‍கு பூஜ்ஜியம் என்ற கணக்‍கில் இந்தியா முன்னிலை வகிக்‍கிறது. இவ்விரு அணிகளுக்‍கு எதிரான 2-வது போட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் Lucknow-வில் நாளை நடைபெறவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00