ஆஸ்திரேலியாவுக்‍கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்‍கெட்டில் இந்தியா அபார வெற்றி - 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரில் முன்னிலை

Dec 10 2018 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -
அடிலெய்டில் நடைபெற்ற பரபரப்பான முதல் டெஸ்ட் கிரிக்‍கெட்டில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா, 4 டெஸ்ட் கொண்ட தொடரின் முதல் போட்டியில், களமிறங்கியது. அடிலெய்டில் நடைபெற்ற இப்போட்டியின் முதன் இன்னிங்சில் இந்தியா 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் எடுத்தன. போட்டியின் நான்காம் நாளான நேற்று இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 307 ரன்களுக்‍கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் மொத்தம் 322 ரன்கள் இந்தியா முன்னிலை பெற்றதால் ஆஸ்திரேலியா வெற்றிபெற 323 ரன்கள் இலக்‍கு நிர்ணயிக்‍கப்பட்டது.

இந்த இலக்‍கை நோக்‍கி நேற்று 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, ஆட்டநேர முடிவில் 4 விக்‍கெட்டுக்‍கு 104 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாளான இன்று அந்த அணி, இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்‍க முடியாமல், அடுத்தடுத்து மேலும் விக்‍கெட்டுகளை இழந்தது. கடைசி கட்டத்தில் கம்மின்ஸ், ஸ்டார்க், லயன் ஆகியோர் சிறப்பாக விளையாடியதால் இந்தியாவுக்‍கு நெருக்‍கடி ஏற்பட்டது. முடிவில், கடைசி விக்‍கெட்டாக ஹாசில்வுட்-ஐ அஸ்வின் அவுட் ஆக்‍கியதால், ஆஸ்திரேலியா 291 ரன்களுக்‍கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்‍க வெற்றியைப் பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00