பெர்த்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் கிரிக்‍கெட்டில் இந்திய அணி தோல்வி - ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்‍க முடியாமல் 2வது இன்னிங்சில் 140 ரன்களுக்‍கே சுருண்டது இந்தியா

Dec 18 2018 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெர்த்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் கிரிக்‍கெட்டில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் படு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 326 ரன்களையும், இந்தியா 283 ரன்களையும் எடுத்தன. 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 243 ரன்கள் எடுத்த நிலையில், 286 ரன்களை வெற்றி இலக்‍காக கொண்டு 2வது இன்னிங்சை விளையாடிய இந்தியா, நேற்றைய ஆட்டநேர முடிவில் 5 விக்‍கெட்டுக்‍கு 112 ரன்கள் எடுத்திருந்தது. போட்டியின் கடைசி நாளான இன்று, இந்தியா 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விக்‍கெட்டுகள் அடுத்தடுத்து வேகமாக சரிந்தன. ஒருவர்கூட தாக்‍குப்பிடித்து விளையாடாததால், முடிவில் இந்தியா 140 ரன்களுக்‍கு ஆல்அவுட் ஆனது. இதனால் 146 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. முதல் டெஸ்ட்டில் இந்தியா வென்றதால், இந்தத் தொடர் தற்போது ஒன்றுக்‍கு ஒன்று என சமநிலை பெற்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00