சச்சின் டெண்டுல்கரின் இளம் வயது பயிற்சியாளர் அச்ரேக்கர் காலமானார்

Jan 3 2019 12:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் இளம் வயது பயிற்சியாளர் அச்ரேக்கர் காலமானார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளராக இருந்து வந்த 86 வயதான அச்ரேக்கர், நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.

கடந்த 1932-ஆம் ஆண்டு பிறந்த அச்ரேக்கர், 1943-ஆம் ஆண்டு நியூ ஹிந்தி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் விளையாடத் தொடங்கினார். கடந்த 1963-64 கால கட்டத்தில் ஒரே ஒரு முதல்தர கிரிக்கெட் போட்டியில் மட்டும் அச்ரேக்கர் விளையாடியுள்ளார். சச்சின் தவிர, அஜித் அகர்கர், சந்திரகாந்த் பண்டிட், வினோத் காம்ப்ளி, பிரவீன் அம்ரே ஆகிய கிரிக்கெட் வீரர்களுக்கும் அச்ரேக்கர் பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்‍கது.

மும்பையில் உள்ள அச்ரேக்‍கர் இல்லத்திற்கு வருகை தந்த சச்சின் டெண்டுல்கர், அஜித் அகர்கர் ஆகியோர், அச்ரேக்‍கரின் உடலுக்‍கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00