உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அபார வெற்றி
Jun 18 2019 4:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், பங்களாதேஷ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
உலகக்கோப்பை தொடரின் 23-வது லீக் ஆட்டம் டான்டனில் நடைபெற்றது. இதில், வெஸ்ட் இண்டீஸ் - பங்களாதேஷ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பங்களாதேஷ், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 321 ரன் எடுத்தது. Shai Hope 96 ரன்னும், Evin Lewis 70 ரன்களும் குவித்தனர். பங்களாதேஷ் சார்பில், Mohammad Saifuddin, Mustafizur Rahman ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பங்களாதேஷ் அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அந்த அணி வீரர்கள், வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்தனர். இதில் சிறப்பாக விளையாடிய ஷகிப்-அல்-ஹசன் - லிட்டன் தாஸ் ஜோடி, வெஸ்ட் இண்டிஸ் அணியினரின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து. இதனால் பங்களாதேஷ் அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 322 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அதிரடியாக விளையாடிய ஷகிப்-அல்-ஹசன் 124 ரன்களுடனும், லிட்டன் தாஸ் 94 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இன்று பிற்பகல் 3.00 மணி அளவில் Manchester நகரில் நடைபெறும் 24 லீக் போட்டியில், இங்கிலாந்து - அஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.