உலகக்‍கோப்பை கிரிக்‍கெட் லீக்‍ போட்டி: பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Jun 21 2019 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்‍கோப்பை கிரிக்‍கெட்டில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 48 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை தொடரின் 26-வது லீக் ஆட்டம் நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ஆஸ்திரேலியா - பங்களாதேஷ் அணிகள் இடையேயான இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 381 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வார்னர் 166 ரன்னும், ஆரோன் ஃபிஞ்ச் 53 ரன்னும், உஸ்மான் கவாஜா 89 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் 382 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பங்களாதேஷ் அணியில், தொடக்க ஆட்டக்‍காரர்களாக தமிம் இக்பாலும், சவுமியா சர்காரும் களமிறங்கினர். சவுமியா சர்கார் 10 ரன் அடித்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஷகிப் அல் ஹசன் 41 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதைத்தொடர்ந்து வந்த முஷ்பிகுர் ரஹிம், தமிம் இக்பாலுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். இருவரும் பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தனர். தமிம் இக்பால் அரை சதம் அடித்த சிறிது நேரத்தில் 62 ரன் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். லிட்டான் தாஸ் 20 ரன்னிலும், மக்முதுல்லா 69 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 333 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 48 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஹெட்டிங்லே லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறும் 27-வது லீக் ஆட்டத்தில், வலுவான இங்கிலாந்து அணி, இலங்கை அணியை சந்திக்‍கிறது. இப்போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00