வெஸ்ட் இண்டீசுக்‍கு எதிரான உலகக்‍கோப்பை கிரிக்‍கெட்டில் அபாரம் - அரையிறுதிக்‍கான வாய்ப்பை உறுதி செய்தது இந்தியா

Jun 28 2019 6:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 34-வது லீக் ஆட்டம் மான்செஸ்டர் நகரின் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்‍க வீரர் ரோகித் சர்மா 18 ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்‍க வீரர் லோகேஷ் ராகுல் கவனமுடன் விளையாடி 48 ரன்கள் சேர்த்தார். அதன்பிறகு, அடுத்தடுத்து மேலும் 3 விக்‍கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணியின் ரன் வேகம் தடைபட்டது. அப்போது பொறுப்புடன் விளையாடிய கேப்டன் கோலி அரைதசம் அடித்து, இந்திய அணி 200 ரன்களைக்‍ கடக்‍க உதவினார்.

ஒருபுறம் தோனி நிதானமாக விளையாடினாலும், மறுமுனையில் ஹர்திக் பாண்டியா 38 பந்தில் 46 ரன்கள் சேர்க்க இந்தியா 250 ரன்களைத் தாண்டியது.

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது. தோனி 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்‍கத்திலிருந்தே இந்திய பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் ரன்கள் எடுக்க முடியாமல் திணறினர். விக்‍கெட்டுகளையும் பறிகொடுத்தனர்.

அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் அம்ப்ரிஸ் 31 ரன்னும், நிகோலஸ் பூரன் 28 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 34 புள்ளி 2 ஓவரில் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து, இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்டும், பும்ரா, சஹல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா அரையிறுதிக்‍குள் நுழைவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00