உலகக்‍கோப்பை கிரிக்கெட் - அஃப்கானிஸ்தானுக்‍கு எதிரான லீக்‍ ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Jul 5 2019 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்‍கோப்பை கிரிக்கெட் தொடரில், அஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக்‍ ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

உலகக்‍கோப்பை கிரிக்கெட் போட்டியின் 42-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. Leeds-ல் உள்ள மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், அஃப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை எடுத்தது. அஃப்கானிஸ்தான் அணியில் தவ்லத் ஜட்ரன் 2 விக்கெட்டுகளும், ரஷித்கான், முகமது நபி, சையத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அஃப்கானிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்களை எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராத்வெய்ட் 4 விக்கெட்டுகளையும், கெமார் ரோச் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00