உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் சர்ச்சையை எழுப்பிய 6 ரன்கள் விவகாரம் - தவறுதான் என நடுவர் முதல்முறையாக ஒப்புதல்

Jul 22 2019 4:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதியாட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு ஓவர்த்ரோ மூலம் 6 ரன்கள் அளிக்கப்பட்டது தவறு என நடுவர் தர்மசேனா ஒப்புக்கொண்டுள்ளார்.

நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், கடந்த 14ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தும் - நியூசிலாந்தும் இறுதியாட்டத்தில் மோதின. இங்கிலாந்து அணி இரண்டாவதாக பேட் செய்தபோது, பரபரப்பான இறுதிக்கட்டத்தில் நியூசிலாந்து வீரர் கப்டில் ஸ்டம்பை குறிபார்த்து பந்தை எறிந்தார். அதனை பிடிக்க முடியாமல் போனதால் பந்து எல்லைக்கோட்டை தொட்டது. அதற்குள் இங்கிலாந்து வீரர்கள் இரண்டு ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து, நடுவராக இருந்த தர்மசேனா அதற்கு 6 ரன்கள் வழங்கினார். ஆனால், இரண்டாவது ரன் ஓடுவதற்கு முன்பாகவே ஸ்டம்பை நோக்கி பந்து எறியப்பட்டதால், 5 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என சர்ச்சை எழுந்தது. இந்த ஒரு ரன்தான் போட்டி 'டை'யில் முடியவும் காரணமாக அமைந்தது. இது தவறான தீர்ப்பு என பலரும் விமர்சித்த நிலையில், தர்மசேனாவும் அதனை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், இதற்காக வருத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார். களத்தில் இருந்தபோது தனக்கு இது தெரியவில்லை என்றும், போட்டி முடிந்தபோது தொலைக்காட்சியில் போட்டு பார்த்தபோதுதான் அனைத்தும் விளங்கியதாக தர்மசேனா தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00