கனடாவில் நடைபெற்ற ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி : ஆடவர் பிரிவில் ரஃபேல் நடாலுக்‍கு சாம்பியன் பட்டம்

Aug 12 2019 5:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவு இறுதியாட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலும், மகளிர் பிரிவு இறுதியாட்டத்தில் கனடாவின் Bianca Andreescu ஆகியோர் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினர்.

கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்தில் உள்ள மான்ட்ரீல் நகரில் நடைபெற்று வந்த ரோஜர்ஸ் கோப்பைக்கான இறுதிப்போட்டிகள் நேற்று நடைபெற்றன. ஆடவர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலும், ரஷ்யாவின் Daniil Medvedev-வும் மோதினர். ஆட்டத்தின் துவக்கத்திலிருந்தே நடாலின் கை ஓங்கிக்காணப்பட்டது. அவரது சர்வீஸ்களை சந்திக்க முடியாமல் Medvedev திணறினார். இறுதியில் 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் ரஃபேல் நடால் வெற்றி பெற்றார்.

மகளிருக்கான இறுதியாட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை கனடாவின் Bianca Andreescu எதிர்த்து விளையாடினார். ஆட்டத்தின் துவக்கத்தில் செரீனா வில்லியம்ஸ் சிறப்பாக விளையாடிய போதிலும், சுதாரித்துக் கொண்ட Bianca Andreescu-ம் அடுத்தடுத்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, செரீனா வில்லியம்ஸை திணறடித்தார். முதல் செட்டில் 3-1 என்ற புள்ளிக்கணக்கு இருந்த நிலையில், போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக செரீனா வில்லியம்ஸ் திடீரென அறிவித்தார். காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார். உடனடியாக Bianca Andreescu சென்று அவருக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து செரீனா வில்லியம்ஸ் விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால், Bianca Andreescu வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00