இந்தியா வெஸ்ட் இண்டீஸ் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - ஆன்டிகுவாவில் முதல் போட்டி இன்று தொடக்கம்

Aug 22 2019 8:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆண்டிகுவாவில் இன்று தொடங்குகிறது.

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கெண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. கேப்டன் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தற்போது மிகவும் பலம் வாய்ந்த அணியாகத் திகழ்கிறது.

இந்திய அணி சுற்றுப்பயணத்தின் மூன்றாம் கட்டமாக இவ்விரு அணிகளுக்‍கு இடையிலான டெஸ்ட் தொடர் இன்று தொடர்கிறது. ஆண்டிகுவாவில் இன்று தொடங்கும் முதல் டெஸ்டில் இரு அணிகளும் களம் இறங்குகின்றன. இந்தப்போட்டியில், இளம் வீரர்கள் மயங்க் அகர்வால், ராகுல் ஆகியோர் களம் இறங்கி ரன் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விஹாரி, ரோஹித் சர்மா, புஜாரா, ஜடேஜா, ரிஷப் பந்த் என இந்திய அணியில் பலம் வாய்ந்த பேட்டிங் வரிசை உள்ளது. இஷாந்த், பும்ரா, ஷமி ஆகியோர் பந்துவீச்சில் எதிரணியை அச்சுறுத்த தயாராக உள்ளனர்.

அதே சமயம் சொந்த மண்ணில் ஒருநாள், டி20 தொடர்களை இழந்து கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதால், டெஸ்ட் போட்டியில் தக்‍க பதிலடி கொடுக்கும் வகையில் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தப் போட்டியை சந்திக்கிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 7.00 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00