இந்திய அணிக்‍கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டி : 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்‍கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்களை எடுத்துள்ளது

Aug 24 2019 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய அணிக்‍கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்‍கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்களை எடுத்துள்ளது.

Antigua-வின் North Sound நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, 297 ரன்களுக்‍கு அனைத்து விக்‍கெட்களையும் இழந்தது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரகானே 81 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 58 ரன்னும், கே.எல். ராகுல் 44 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் Kemar Roach 4 விக்‍கெட்களையும், Gabriel 3 விக்கெட்களையும், Chase 2 விக்‍கெட்களையும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள், சீரான இடைவேளைக்‍குப் பின்னர் தங்களது விக்‍கெட்டுகளை இழந்தனர். 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 8 விக்‍கெட்டுகளை இழந்து 189 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக Chase 48 ரன்களும், Hetmyer 35 ரன்களும் எடுத்தனர். கேப்டன் Jason Holder மற்றும் Cummins களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் Ishant Sharma அதிகபட்சமாக 5 விக்‍கெட்டுகளை வீழ்த்தினார்.

2 விக்‍கெட்டுகளே மீதமுள்ள நிலையில், இந்திய அணியின் ஸ்கோரை சமன் செய்ய வெஸ்ட் இண்டீஸ் அணிக்‍கு 108 ரன்கள் தேவைப்படுவது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00