உலக பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வெல்வாரா இந்தியாவின் சிந்து? - இறுதிப்போட்டியில் இன்று ஜப்பான் வீராங்கனையுடன் மோதல்

Aug 25 2019 3:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக சாம்பியன் ‍பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து இன்று ஜப்பான் வீராங்கனையை சந்திக்‍கிறார்.

சுவிட்சர்லாந்தில், உலக சாம்பியன் பட்ட பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்‌றையர் பிரிவில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டியில், சீனாவின் சென் யு பெய்-யை எதிர்கொண்டார். அவரை, 21 - 7, 21 - 14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இன்று நடைபெறவுள்ள இறுதிபோட்டியில், தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் 24 வயதான சிந்து, முன்னாள் உலக சாம்பியனும், 4-ம் நிலை வீராங்கனையுமான ஜப்பானின் நஜோமி ஒகுஹராவுடன் மோதவுள்ளார்.

சிந்துவும், ஒகுஹராவும் இதுவரை 15 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 8 முறை சிந்துவும், 7-ல் ஒகுஹராவும் வெற்றி கண்டுள்ளனர். இன்றைய போட்டியில் வெற்றிபெற்று முதல் முறையாக சிந்து தங்கம் வெல்வார் என எதிர்பார்க்‍கப்படுவதால் பலரும் இதனைக்‍ காண ஆவலுடன் காத்திருக்‍கின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00