வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி - 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பும்ரா அசத்தல்

Aug 26 2019 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டியில், இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 297 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்களும் எடுத்தன. அடுத்து 75 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடர்ந்தது. அதிரடியாக விளையாடிய ரஹானே 102 ரன்களிலும், விஹாரி 93 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 343 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு 419 ரன்கள், வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்‍கு, இந்திய வீரர்கள் கடும் நெருக்‍கடி கொடுத்தனர். பும்ராவும், இஷாந்த் சர்மாவும் துல்லியமாக பந்துவீசி எதிரணி வீரர்களை திணறிடித்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 100 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேமர் ரோச் 38 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அபாராமாக பந்து வீசிய பும்ரா 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனால் இந்திய அணி, 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-க்‍கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்‍கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி, Jamaica-வில் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00