ஆஷஸ் டெஸ்ட் தொடர் - 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

Aug 26 2019 10:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக 359 ரன்களை ஆஸ்திரேலியா நிர்ணயித்தது. நேற்றைய தினம், 3 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களுடன் 4ம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து தொடங்கியது. அந்த அணியின் ஜோ ரூட் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், பேர்ஸ்டோவ், பட்லர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்திருந்து. கைவசம் ஒரு விக்கெட் இருந்த நிலையில் 73 ரன்கள் தேவைப்பட்டது. இத்தகைய இக்கட்டான நேரத்தில் அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் பொறுப்புடன் விளையாடி, அணியை வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றியின் மூலம் ஆஷஸ் தொடரை ஒன்றுக்கு ஒன்று என இங்கிலாந்து சமநிலைப் படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00