திருச்சியில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி : திருச்சி கல்லூரி அணி சாம்பியன்

Sep 4 2019 8:50AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சியில் மாநில அளவில் கல்லூரிகளுக்‍கு இடையே நடைபெற்ற ஹாக்‍கி போட்டியில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கல்லூரி மாணவர்களிடையே ஹாக்கி போட்டியின் முக்கியத்துவம் மற்றும் வீரர்களின் திறனை மேம்படுத்தும் வகையில், திருச்சி ஜமால் முகமது கல்லூரியில், 19வது மாநில அளவிலான காஜா மியான் கோப்பைக்கான ஹாக்கி போட்டி கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து 14 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

முதலாவது அரையிறுதியில் திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரியை 2-1 என்ற கோல் கணக்கில் மதுரை அமெரிக்கன் கல்லூரி வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதிப் போட்டியில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, கோவை மாருதி கல்லூரியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி அணிகள் மோதின. இந்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியை வீழ்த்தி திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்‍கப்பரிசு வழங்கப்பட்டது. இப்போட்டியினை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இதனிடையே, ஸ்ரீபெரும்புதூரில், கல்வி ஒன்றே சமூகத்திற்கான மாற்றம் என்பதை வலியுறுத்தி, நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் 100-க்கும் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இளைஞர்கள் தங்கள் கையில் தீபச் சுடரை ஏந்தியவாறு ஓடினர். பெரும்புதூரில் இருந்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக பூந்தமல்லி, ஆண்ட்ரோசன் பேட்டை வரை சென்றனர். முன்னதாக சமாதானத்தை எடுத்துரைக்‍கும் வகையில் வானில் புறாக்கள் பறக்கவிடப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00