இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி அபார வெற்றி - ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது

Sep 23 2019 11:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

பெங்களூருவில் நடைபெற்ற 20 ஓவர் கிரிக்‍கெட் போட்டியில், இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தென்னாப்பிரிக்‍க வீரர்களின் அபார பந்து வீச்சை சமாளிக்‍க முடியாமல் இந்திய அணி, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே சேர்த்தது. தவான் அதிக பட்சமாக 36 ரன் எடுத்தார். பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்‍கா, 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 16.5 ஓவரில் 140 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் டிக் காக் அரை சதம் அடித்து அணியை வெற்றிக்‍கு அழைத்துச் சென்றார். இந்த வெற்றியின் மூலம் 20 ஓவர் தொடரை, 1-1 என சமன் செய்தது.

இவ்விரு அணிகளுக்‍கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், அடுத்த மாதம் 2-ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00