தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி - இரண்டுக்‍கு பூஜ்யம் என்ற கணக்‍கில் தொடரை வென்றது

Oct 13 2019 6:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று, தொடரை வென்றது.

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். மயங்க் அகர்வால் சதமடித்து 108 ரன்னிலும், புஜாரா 58 ரன்னிலும், ரகானே 59 ரன்னிலும், ஜடேஜா 91 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி இரட்டை சதமடித்தார். இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்த நிலையில் தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

பின்னர் முதன் இன்னிங்சை விளையாடி தென் ஆப்ரிக்க அணி, 275 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய தென் ஆப்ரிக்க வீரர்கள், இந்திய பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். டீன் எல்கர் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார். இறுதியில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 189 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடரை 2க்கு பூஜியம் என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00