உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சர்ச்சையை ஏற்படுத்திய பவுண்டரி விதிமுறை - சூப்பர் ஓவர் விதிமுறையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்தது ஐசிசி

Oct 15 2019 1:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக் கோப்பையில் சர்ச்சையை ஏற்படுத்திய பவுண்டரி முறையை ஐசிசி நீக்கியுள்ளது.

2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில், இரு அணிகளும் தலா 241 ரன்கள் எடுத்ததால், வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. அதிலும் இரு அணிகளும் ஒரே ரன்களை எடுத்தன. இதையடுத்து, பவுண்டரி அடிப்படையில், அதிக பவுண்டரிகள் எடுத்த இங்கிலாந்து அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. பவுண்டரி முறையில் வெற்றியை தீர்மானித்ததால், பெரும் சர்ச்சை கிளம்பியது.

இந்த நிலையில், ஐசிசி தொடர்களில் போட்டி சமனில் முடிந்தால், வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை மட்டுமே பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, போட்டி "டை"-யில் முடிந்த பிறகு, சூப்பர் ஓவர் முறையிலும், ஒரே ரன்கள் எடுக்கப்பட்டால், வெற்றியாளரை தீர்மானிக்கும் வரை மீண்டும் மீண்டும் சூப்பர் ஓவர் முறையே பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, ஐசிசி கிரிக்கெட் குழுவின் பரிந்துரையின்படி, எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி விளக்கம் அளித்துள்ளது. இந்த புதிய முறை, ஐசிசியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00