FIFA உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றுப் போட்டி : இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமன்

Oct 16 2019 1:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

FIFA உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

கத்தாரில் வரும் 2022 ஆம் ஆண்டில் உலகக் கோப்பை போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டிக்கு ஆசியாவில் இருந்து அணிகளைத் தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தகுதிச்சுற்றில் இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொண்டது. இதில், வங்கதேச அணி தரவரிசையில் இந்தியாவைவிட 83 இடங்கள் பின்தங்கியிருந்தாலும் இந்திய அணிக்கு இந்த ஆட்டத்தில் அச்சுறுத்தலாகவே இருந்தது. தொடக்கம் முதலே துல்லியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வங்கதேச அணி, ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது. இந்த கோலை வங்கதேச வீரர் சாத் உத்தின் அடித்து அசத்தினார். இதையடுத்து, ஆட்டத்தின் 88-வது நிமிடத்தில் இந்திய வீரர் அடில் கான் ஒரு கோல் அடித்து சமன் செய்தார். இதன்பிறகு, இரண்டு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கிலேயே சமனில் முடிந்தது. இதன்மூலம், இந்திய அணி புள்ளிப் பட்டியலில் தற்போது 2 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் 1 புள்ளியுடன் 5-வது இடத்தில் உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00