ஆர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் Lionel Messi-க்கு 6-வது முறையாக ஐரோப்பிய தங்க காலணி விருது - உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதை பாராட்டி கௌரவம்
Oct 17 2019 12:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பார்சிலோனா கால்பந்து அணியின் கேப்டனும், ஆர்ஜென்டினாவின் நட்சத்திர வீரருமான Lionel Messi, 6-வது முறையாக ஐரோப்பிய தங்க காலணியை கைப்பற்றியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்கில் யார் அதிக எண்ணிக்கையில் கோல் அடிக்கிறார்களோ, அவர்களுக்கு ஆண்டுதோறும் யூரோப்பியன் தங்க ஷூ வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, 2018-19 சீசனில் லா லிகாவில் பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் பார்சிலோனா கால்பந்து அணியின் கேப்டன் Lionel Messi, 34 கோல்கள் அடித்து முதல் இடம் பிடித்தார். பார்சிலோனா நகரில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், அவருக்கு தங்க ஷூ வழங்கப்பட்டது. இதன்மூலம் மெஸ்சி 6 முறை தங்க ஷூ விருதை வென்று சாதனைப் படைத்துள்ளார்.
போர்ச்சுகல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒட்டுமொத்தமாக நான்கு முறை தங்க ஷூவை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.