ஆன்லைன் தேடலின்போது ஆபத்தான இணையதளங்களுக்கு கொண்டு செல்லும் பெயர்கள் பட்டியலில் கிரிக்கெட் வீரர் தோனியின் பெயர் முதலிடம்

Oct 23 2019 8:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆன்லைன் தேடலின்போது, ஆபத்தான இணையதளங்களுக்கு கொண்டு செல்லும் பெயர்கள் பட்டியலில், கிரிக்கெட் வீரர் தோனியின் பெயர் முதலிடத்தில் உள்ளது.

ஆன்லைனில் ஏதெனும் ஒரு பொருளையோ அல்லது ஒரு பெயரையோ நாம் தேடும்போது, அது தொடர்பாக வேறு சில லிங்க்குகளும் நமக்கு திரையில் காண்பிக்கப்படும். அதேபோல், சமூக வலைதளங்களில் சில மோசடி நபர்கள் போலியான கணக்குகள் மூலம், பிரபலங்களைப் பற்றிய பொய் செய்தியையோ, புகைப்படங்களையோ வெளியிடுவர். பயனாளர்கள் அவற்றை கிளிக் செய்தால், அது ஆபத்தான சில இணையதளங்களுக்கு கொண்டு செல்லும். அதன் மூலம் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுகின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக, மெக்கபீ என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம், ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், 2019-ம் ஆண்டில் கிரிக்கெட் வீரர் தோனியின் பெயரை ஆன்லைனில் தேடும்போதே, அதிகம் பேர் ஆபத்தான இணையதளங்களுக்கு இழுத்துச் செல்லப்படுவதாக தெரிய வந்துள்ளது. 2-வதாக சச்சின் டெண்டுல்கரின் பெயர், ஆபத்தான தளங்களுக்கு கொண்டு செல்கிறது. நடிகைகள் சன்னி லியோனின் பெயர் இந்த வரிசையில் 4-வது இடத்தில் உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00