ஃப்ரெஞ்ச் ஓபன் பாட்மிண்டன் - இந்திய வீராங்கணை சிந்து வெளியேறினார்

Oct 26 2019 2:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஃப்ரெஞ்ச் ஓபன் பாட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் காலிறுதி போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான தைவானின் Tai Tzu Ying-கிடம் தோல்வியடைந்து, பி.வி. சிந்து வெளியேறினார்.

ஃப்ரான்ஸ் தலைநர் பாரிசில் நடைபெற்று வரும் ஃப்ரெஞ்ச் ஓபன் பாட்மிண்டன் தொடர் இறுதிக்‍ கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காலிறுதி போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து, உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான தைவானின் Tai Tzu Ying-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் செட்டில், 21-16 என்ற கணக்கில் சிந்து தோல்வியடைந்தார். 2-வது செட்டில் சுதாரித்த ஆடிய சிந்து, 24-26 என்ற கணக்‍கில் வென்று, ஒன்றுக்‍கு ஒன்று என்ற கணக்‍கில் சமன் செய்தார். பின்னர் 3-வது செட்டில் அதிரடியாக விளையாடிய Tai Tzu Ying, 21-17 என்ற கணக்‍கில் வென்று, சிந்துவை தோற்கடித்தார்.

இதன் மூலம் ஃப்ரெஞ்ச் ஓபன் தொடரில் 5-வது முறையாக Tai Tzu Ying அரையிறுதி போட்டிக்‍கு தகுதி பெற்றுள்ளார்.

இதனிடையே, ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி சுற்றில், இந்தியாவின் சத்விக்‍ சாய்ராஜ், சிராக்‍ ஷெட்டி ஜோடி, டென்மார்க்‍கின் Kim Astrup மற்றும் Anders Skaarup இணையை, 21-13, 22-20 என வீழ்த்தி அரையிறுதிக்‍கு முன்னேறியது.

முன்னதாக பெண்கள் ஒற்றையர் காலிறுதி போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால், தென்கொரியாவின் An Se Young-ஐ எதிர்கொண்டார். இதில் 20-22, 21-23 என்ற நேர் செட்டுகளில் சாய்னா நேவால் தோல்வியடைந்து, அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00