முதன்முறையாக பங்கேற்ற பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மகத்தான வெற்றி: கொல்கத்தா டெஸ்டில் பங்களாதேஷை வென்று தொடரை கைப்பற்றியது

Nov 24 2019 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொல்கத்தாவில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்சில், 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி, கேப்டன் விராட் கோலியின் அதிரடி சதத்தால், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், தனது 27-வது சதத்தை கேப்டன் விராட் கோலி பதிவு செய்தார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்தும் சாதனை படைத்தார்.

இதன்பின்னர், இரண்டாவது இன்னிங்சை விளையாடிய பங்களாதேஷ் அணி, இந்திய வேகப்பந்து வீச்சை மீண்டும் சமாளிக்க முடியாமல் திணறியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், பங்களாதேஷ் அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில், இஷாந்த் சர்மா 4 விகெட்டுகளும், உமேஷ் யாதவ், 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியதும் எஞ்சிய விக்கெட்களையும் பங்களாதேஷ் அணி வேகமாக இழந்தது. இறுதியில், அனைத்து விக்கெட்களையும் இழந்து அந்த அணி 195 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00