பிரிமீயர் பேட்மிண்டன் லீக் 5-வது சீசன் : அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள உலக சாம்பியன் பி.வி. சிந்து

Nov 27 2019 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரிமீயர் பேட்மிண்டன் லீக் 5-வது சீசனில் உலக சாம்பியன் பி.வி. சிந்து அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

பிரிமீயர் பேட்மிண்டன் லீக் 5-வது சீசனுக்கான போட்டிகள் வரும் ஜனவரி 20ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்த போட்டிகளில் 74 இந்திய பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இதற்கான வீரர், வீராங்கனைகள் ஏலம் நேற்று நடைபெற்றது. உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை பி.வி. சிந்து 77 லட்சம் என்ற அதிகபட்ச தொகைக்கு ஹைதராபாத் ஹன்டர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டு தக்க வைக்கப்பட்டார்.

இதேபோன்று உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள தாய் சூ யிங், இதே தொகைக்கு நடப்பு சாம்பியனான பெங்களூரு ராப்டர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இந்தியாவின் மற்றொரு முன்னணி வீரரான பி. சாய் பிரணீத் 32 லட்சம் ரூபாய்க்‍கு பெங்களூரு ராப்டர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டு அணியில் தக்க வைக்கப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00