இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி - 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி

Dec 9 2019 6:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரண்டு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர் ராகுல் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய இளம் வீரர் சிவம் துபே, 27 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 15 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில், இந்திய அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிம்மோன்ஸ், லீவிஸ் ஆகியோர், இந்திய பந்துவீச்சை சிதறடித்தனர். சிறப்பாக விளையாடிய சிம்மோன்ஸ், அரைசதம் அடித்தார். 18 புள்ளி 3 ஓவர்களில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு, 173 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடர், ஒன்றுக்கு ஒன்ற என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி, வரும் 11-ம் தேதி மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00