20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : நேற்று நடைபெற்ற போட்டிகளில் தென் ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி

Oct 27 2021 7:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டிகளில் தென் ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன.

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த சூப்பர்-12 சுற்றின் 18-வது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்த சூழலில், முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய தென் ஆப்ரிக்கா அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 18.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 144 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான், பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் 18.4 ஓவர்களில் 5 விக்கெட்களை பறிக்கொடுத்து 135 ரன்களை எடுத்தது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00