கொரோனா பாதித்த நபரை உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் வீட்டுத் தனிமைக்கு அனுமதிக்கக்கூடாது : மாவட்ட நிர்வாகத்துக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

Jan 16 2022 5:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பாதித்த நபரை உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் வீட்டுத் தனிமைக்கு அனுமதிக்கக்கூடாது என மாவட்ட நிர்வாகத்துக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக சுகாதாரத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கொரோனா பாதித்த நபரை உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் வீட்டுத் தனிமைக்கு அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளும் தற்போது கைவசம் உள்ள ஆக்சிஜன் சிகிச்சை, சேவைகளை உடனே மதிப்பிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள தமிழக சுகாதாரத்துறை, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் வெண்டி லேட்டர் வசதி ஏற்படுத்துவதுடன், 48 மணி நேரத்துக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00