மத்திய பாரதிய ஜனதா அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் - கேரள மாநில அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு

Jan 14 2020 9:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் கேரள மாநில அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.

அரசியல் சாசன விரோத, குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், அதனை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரியும், கேரள மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இச்சட்டம், அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் கேரள மாநில அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் முக்கிய கோட்பாடுகளான சமத்துவம், மக்கள் உரிமை, மதச்சார்பின்மை ஆகியவற்றை சீர்குலைக்கும் வகையில், குடியுரிமை திருத்தச் சட்டம் அமைந்திருப்பதாக, கேரள அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம்லீக், ராஷ்டிரிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், ஏற்கெனவே 59 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, முதல் மாநில அரசாக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00