அ.ம.மு.க.வினர் தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்- 4 நாட்களாக ஆயிரக்கணக்கான கழகத்தினர் ஆர்வத்துடன் விருப்ப மனு செய்து வருகின்றனர்

Mar 7 2021 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், போட்டியிடுபவர்களுக்கான நேர்காணல் நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறுகிறது. மாவட்டவாரியாக நடைபெறவுள்ள நேர்காணல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு விண்ணப்ப படிவம் அளித்தவர்களுக்கான நேர்காணல், நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை ராயப்பேட்டையிலுள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறவுள்ளது. இதில் மாவட்டவாரியாக ஒதுக்கப்பட்ட நேரத்தில் தங்களின் தொகுதியில் கழக பொதுச்செயலாளருக்காக விருப்ப மனு அளித்தவர்களும், தாங்கள் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்தவர்களும், அவரவர்களுக்கு வழங்கப்பட்ட அசல் ரசீதுடன் நேரில் கலந்து கொள்ளுமாறு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை வடசென்னை கிழக்கு மாவட்டம் தொடங்கி கடலூர் வடக்கு மாவட்டம் வரை மொத்தம் கழக ரீதியாக செயல்படும் 54 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், நேர்காணலில் பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடசென்னை கிழக்கு, வடசென்னை மத்தி, வடசென்னை மேற்கு, மத்திய சென்னை கிழக்கு, மத்திய சென்னை மத்தி, மத்திய சென்னை மேற்கு, தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு, தென்சென்னை கிழக்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்தி, ஈரோடு மாநகர் கிழக்கு, ஈரோடு மாநகர் மேற்கு, ஈரோடு புறநகர், திருப்பூர் மாநகர் வடக்கு, திருப்பூர் மாநகர் தெற்கு, திருப்பூர் புறநகர், கோவை கிழக்கு, கோவை மேற்கு, கோவை மத்தி, கோவை வடக்கு, கோவை தெற்கு, நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர் நாளை காலை 8 மணிக்கு பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மத்தி, கிருஷ்ணகிரி மேற்கு, தருமபுரி கிழக்கு, தருமபுரி மேற்கு, நாமக்கல் வடக்கு, நாமக்கல் தெற்கு, நாமக்கல் மேற்கு, கரூர் மேற்கு, அரியலூர், தஞ்சாவூர் மாநகர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம் வடக்கு, நாகப்பட்டினம் தெற்கு, திருவாரூர், புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை மத்தி, புதுக்கோட்டை தெற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர் நாளை காலை 10 மணிக்கு நேர்காணலில் பங்கேற்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து சேலம் புறநகர் கிழக்கு, சேலம் புறநகர் மேற்கு, சேலம் மத்தி, சேலம் வடக்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மத்தி, கடலூர் மேற்கு, கடலூர் வடக்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர், நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

நாளை மறுநாள், மதுரை மாநகர் வடக்கு தொடங்கி, காஞ்சிபுரம் மாவட்டம் வரை ஒட்டுமொத்தமாக, கழக ரீதியான 39 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நேர்காணல் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்று காலை 8 மணிக்கு மதுரை மாநகர் வடக்கு, மதுரை மாநகர் தெற்கு, மதுரை புறநகர் வடக்கு, மதுரை புறநகர் தெற்கு, தேனி வடக்கு, தேனி தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கழகத்தினர் நேர்காணலில் பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள நேர்காணலில், விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மத்தி, விருதுநகர் மேற்கு, திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, தூத்துக்குடி மாநகர், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர், கரூர் கிழக்கு, திருச்சி மாநகர், திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, ராணிப்பேட்டை, வேலூர் மாநகர், வேலூர் புறநகர், திருப்பத்தூர், திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை மத்தி, திருவண்ணாமலை தெற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நாளை மறுநாள் மாலை 3 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 5 மணிக்கு நடைபெறும் நேர்காணலில், திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் தெற்கு, செங்கல்பட்டு வடக்கு, செங்கல்பட்டு தெற்கு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00