சி.பி.ஐ., அமலாக்‍கத்துறையை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தும் மத்திய அரசு - சரத்பவார் குற்றச்சாட்டு

Oct 13 2021 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
சி.பி.ஐ., வருமானவரி, அமலாக்கத்துறை, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு உள்ளிட்டவற்றை, மத்திய அரசு, அரசியல் லாபத்திற்காக தவறான முறையில் பயன்படுத்தி வருவதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் திரு. சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார்.

மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அணில் தேஷ்முக்‍ வீட்டில் தொடர்ந்து 5-வது முறையாக நேற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களின் சந்திப்பின்போது பேசிய திரு. சரத்பவார், முன்னாள் அமைச்சர் வீட்டில் தொடர்ச்சியாக சோதனை மேற்கொள்ளப்படுவது ஆச்சரியத்தை அளிப்பதாக தெரிவித்தார். ஒருவர் வீட்டில் தொடர்ந்து 5-வது முறையாக சோதனை மேற்கொள்ளப்படுவதில் என்ன தேவை உள்ளது என கேள்வி எழுப்பிய அவர், இதுகுறித்து பொதுமக்‍களும் தெரிந்துகொள்ள வேண்டி உள்ளதாக குறிப்பிட்டார்.

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்‍கான் மகன் ஆர்யன் கான் கைதான வழக்‍கில், மஹாராஷ்டிரா அரசு போதுமான நடவடிக்‍கைகளை எடுத்து வரும் நிலையில், மத்திய அரசு போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவை, மாநில அரசுக்‍கு தீங்கிழைக்‍கும் நோக்‍கத்துடன் பயன்படுத்துவதாக தெரிவித்தார். மேலும், சி.பி.ஐ., வருமானவரி, அமலாக்கத்துறை உள்ளிட்டவற்றை, மத்திய அரசு அரசியல் லாபத்திற்காக தவறான முறையில் பயன்படுத்தி வருவதாக திரு. சரத்பவார் குற்றம் சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00