ஆம்ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் பஞ்சாப் மாநில முதல்வர் யார்? - பஞ்சாப் மக்களிடம் கருத்து கேட்கும் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால்

Jan 13 2022 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆம்ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை, அம்மாநில மக்கள், இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என அக்‍கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல், அடுத்த மாதம் 14ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ், பா.ஜ.க, ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம்ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதல்வருமான திரு. அரவிந்த் கெஜ்ரிவால், தங்கள் கட்சி சார்பில் Bhagwant Mann-ஐ முதல்வராக்க வேண்டும் என நான் கூறியதாக தெரிவித்தார். ஆனால் பஞ்சாப் மக்களே இதனை முடிவு செய்ய முடியும் எனக்‍ கூறிய அவர், ஆம்ஆத்மி கட்சியின் சார்பில் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை மக்களே இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என கூறினார். ஆம்ஆத்மியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளரை, பஞ்சாப் மக்கள் தேர்வு செய்ய 7074870748 என்ற எண்ணில், வரும் 17-ம் தேதி வரை தொடர்பு கொள்ளலாம் என்றும் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00