ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் இன்று சந்திப்பு - சட்டமன்றத் தேர்தலுக்கு முன் இருவரையும் ஒருங்கிணைக்க காங்கிரஸ் நடவடிக்கை

May 29 2023 10:15AM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜஸ்தானில் எதிரும் புதிருமாக செயல்பட்டு வரும் முதலமைச்சர் அசோக் கெலாட்டும் சச்சின் பைலட்டும் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை இன்று சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் சச்சின் பைலட், மாநிலம் தழுவிய போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில்தான் கெலாட்டும் பைலட்டும் டெல்லியில் இன்று கார்கேவை தனித்தனியாக சந்தித்துப் பேச உள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இருவரையும் ஒன்றிணைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கர்நாடகாவில் சித்தராமையா மற்றும் டி.கே சிவக்குமாரை ஒன்றிணைப்பதில் கார்கே வெற்றி பெற்றதால் ராஜஸ்தானிலும் அதே ஃபார்முலாவை கடைப்பிடிக்க கட்சி முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00