பிலிப்பைன்ஸில் கடலில் கப்பல் கவிழ்ந்து விபத்து - மாயமான தூத்துக்குடி மற்றும் கோவையை சேர்ந்த இளைஞர்களை மீட்டுத்தரக்கோரி உறவினர்கள் கோரிக்கை

Oct 17 2017 11:06AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிலிப்பைன்ஸில் கடலில் கப்பல் கவிழ்ந்த விபத்தில் மாயமான கோவை மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர்கள் இருவரை மீட்டுத்தரக்கோரி அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தோனிஷியாவில் இருந்து சரக்கு கப்பல் மூலம்கடந்த 13-ம் தேதி சீனாவிற்கு 26 பேர் சென்றுள்ளனர். அப்போது பிலிப்பைன்ஸ் அருகே கப்பல் கடலில் முழ்கி விபத்திற்குள்ளானதாக தகவல்கள் வெளியாகின. இதில் கப்பலில் இருந்த 26 பேரும் கடலில் குதித்தனர். அந்த வழியாக வந்த கப்பல், கடலில் தத்தளித்தவர்களில் 16 பேரை மீட்டனர், மீதமுள்ள 10 பேரின் நிலை என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தகவல் தெரியவில்லை.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயலை பகுதியை சேர்ந்த தாமஸ் என்பவர் கடலில் மூழ்கிய பிலிப்பைன்ஸ்கப்பலில் பணியாற்றி வந்துள்ளார். இதுவரை அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் மத்திய, மாநில அரசுகள் தாமசை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோன்று கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சோலபாளையம் கிராமத்தை சேர்ந்த கிரிதர் குமார் என்பவரும் கடலில் மூழ்கிய பிலிப்பைன்ஸ் கப்பலில் மாயமானதால் அவரை மீட்டுத்தரக்கோரி உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00