மீன்பிடித்தடைக்காலம் முடிந்து நள்ளிரவு முதல் மீண்டும் கடலுக்கு செல்லும் மீனவர்கள் - இலங்கை கடற்படையின் அராஜக செயலுக்‍கு முற்றுப்புள்ளி வைத்து மீனவர்களை பாதுகாக்கவேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை

Jun 14 2018 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
மீன்பிடித்தடைக்காலம் முடிந்து இன்று நள்ளிரவு முதல் நாகை மாவட்ட மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்கின்றனர். அடிக்கடி கைது செய்யும் இலங்கை அரசிடம் இருந்து தமிழக மீனவர்களை காக்கவேண்டும் என மத்திய அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

61 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் முடிந்து இன்று நள்ளிரவு முதல் நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். கடந்த 2 மாதங்களாக களையிழந்து காணப்பட்ட நாகை மீன்பிடி துறைமுகம் சுறுசுறுப்பாக காணப்படுகிறது. 1000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கடலுக்கு செல்ல தயார் நிலையில் இருப்பதால், விசைப்படகுகளில் ஐஸ் ஏற்றுவது, டீசல் ஏற்றுவது போன்ற முன்னேற்பாடுகள் பணிகளில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நகைகளை அடமானம் வைத்தும், வட்டிக்கு வாங்கியும் படகுகளை சரிசெய்து புறப்படுவதாக கூறும் மீனவர்கள், அதிக அளவில் மீன் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு சார்பாக குறைந்த அளவிலேயே மானிய டீசல் வழங்குவதாக கூறும் மீனவர்கள், தற்போது 72ரூபாயாக டீசல் விலை உயர்ந்துள்ளதால் சமாளிக்க முடியவில்லை எனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது நடைமுறையில் இருக்கும் மாதம் 1800லிட்டர் மானிய டீசலை 5000லிட்டராக உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 61 நாட்கள் தடைக்காலம் முடிந்து பல லட்சம் செலவு செய்து அச்சத்துடனே மீன்பிடிக்க செல்வதாக கூறும் மீனவர்கள், காற்றின் வேகத்தால் படகு திசைமாறி சென்றாலும், இலங்கை கடற்படையினர் கைது செய்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே, இனியாவது, மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்கும் வகையில், மத்திய அரசு தமிழக மீனவர்களை இலங்கை அரசிடம் இருந்து காக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், வருடாவரும் மீனின் விற்பனை விலை என்பது குறைந்துகொண்டே செல்வதால், தாங்கள் நஷ்டபடுவதாக கூறும் மீனவர்கள், மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கவேண்டும் எனவும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3091.00 Rs. 3306.00
மும்பை Rs. 3114.00 Rs. 3297.00
டெல்லி Rs. 3127.00 Rs. 3312.00
கொல்கத்தா Rs. 3127.00 Rs. 3309.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.40 Rs. 40400.00
மும்பை Rs. 40.40 Rs. 40400.00
டெல்லி Rs. 40.40 Rs. 40400.00
கொல்கத்தா Rs. 40.40 Rs. 40400.00